Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப்-2, 2A தேர்வர்களே…. இன்று (பிப்…23)ஆம் தேதி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை பிப்ரவரி 23 (இன்று) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதாக அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் குரூப்-2 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in வாயிலாக தேர்வு குறித்த அனைத்து விவரங்களையும் இன்று (பிப்.23) பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு முன்பாக டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு டிசம்பர் 7 அன்று, 2022 ஆம் வருடத்துக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது.

இந்த அட்டவணையின்படி, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் எனவும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரம் 2022 ஆம் வருடத்தில் மொத்தம் 32 வகையான தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில் அறிவிக்கப்பட்டபடி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டது. அந்த அடிப்படையில் குரூப் 2 தேர்வு மே மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது.

அதனை தொடந்து தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2A பதவிகளில் மொத்தம் 5,831 காலியிடங்கள் இருக்கின்றன. அதேபோன்று குரூப் 4 பணியிடங்களில், 5,244 காலியிடங்கள் இருக்கின்றன. எனினும் இவை தற்காலிக எண்ணிக்கை ஆகும். ஆகவே இந்த காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான தேதிகள்:

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு தேதி- பிப்ரவரி 23, 2022

டிஎன்பிஎஸ்சிகுரூப் 2 ஆன்லைன் பதிவுக்கான கடைசி தேதி- மார்ச் 23, 2022

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பிரிலிம்ஸ் தேர்வு தேதி- மே 21, 2022

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பிரிலிம்ஸ் தேர்வு முடிவு தேதி- ஜூன் 5, 2022

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு தேதி- செப்டம்பர் 2022

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவு தேதி- டிசம்பர் 2022

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்காணல் தேதி- பிப்ரவரி 2023

தற்போது குரூப் 2 தேர்வின் அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிக்க அதிகபட்சம் வயது வரம்பு 30 வருடங்கள் ஆகும். எனினும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, SC, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs பிரிவுகளை சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்சம் வயது வரம்பு இல்லை.

Categories

Tech |