Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 3, 4 & VAO தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தி தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் டிஎன்பிசி தேர்வாணையம் குரூப் 1 மற்றும் குரூப் 2, 2A உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக போட்டித் தேர்வுகள் நடைபெற வில்லை. அதனால் தற்போது 2022 ஆம் ஆண்டுக்கான போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அனைத்து போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதி தாளில் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்மொழி பகுதிகளில் 40% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே மற்ற தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ் மொழி தகுதி தாள் பாடத்திட்டம் எவ்வாறு கேட்கப்படும் என்று தேர்வர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை குரூப் 3, குரூப் 4, குரூப் 7பி, குரூப் 8 போன்ற பதவிகளுக்கான தயாராகி வரும் தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தேர்வர்கள் http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். எனவே தேவர்கள் அனைவரும் இந்த புதிய பாடதிட்டத்தை பின்பற்றி தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Categories

Tech |