Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் குரூப் 4 தட்டச்சர் பதவிக்கு நேரடி நியமனம் அடிப்படையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் பிறகு அதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 2019 செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற்று அதற்கான தேர்வு முடிவுகள் 2019 நவம்பர் 12ஆம் தேதி வெளியிடப் பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முதல் கட்டமாக மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகின்ற டிசம்பர் 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில், சென்னை 3 தேர்வாணைய சாலை உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் ஒட்டுமொத்தமாக தரவரிசை எண், இட ஒதுக்கீடு மற்றும் காலி பணியிடங்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இது குறித்து விவரங்கள் அடங்கிய கடிதத்தினை டிஎன்பிசி என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கலந்தாய்வு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விபரம் SMS மற்றும் இ-மெயில் மூலம் தெரிவிக்கப்படும். கலந்தாய்வில் அழைக்கப்பட்ட தேர்வர்கள் கலந்தாய்வு நடைபெறும் நேரத்திற்கு வரத் தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |