தமிழக அரசு துறைகளில் காலியாகவுள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள். கொரோனா காரணமாக சென்ற 2 வருடங்களாக தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து தற்போது சென்ற 2 வருடங்களுக்கு பின் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 2 தேர்வு வரும் மே 21ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. அதன்பிறகு குரூப் 4 மற்றும் VAO தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.இந்த தேர்வு வாயிலாக 7,382 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் குரூப்-4 தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிகொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதவுள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான நேரடி மற்றும் இணைய வழி பயிற்சி வகுப்புகள் வருகின்ற 20ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் http://t.me+huB_ieZ54OEzODc9 TELEGRAM QR CODE என்ற இணைப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கோ. வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.