கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக தள்ளிப்போன குரூப் 4 தேர்வானது கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது.கிராம நிர்வாக அலுவலர் டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. சுமார் 7382 பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்த நிலையில்18.5 லட்சம் பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். கடந்த வருடங்களை விட இந்த வருடம் வினாத்தாள் சற்று கடினமாகவே இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் இந்த வருடம் குறைவான காலிப்பணியிடங்கள் அதிகமானவர்கள் விண்ணப்பிக்க தேர்வு எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேர்வு நடந்து முடிந்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இருப்பினும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் தேர்வு முடிவு வெளியாகும் என்று கூறப்படுகிறது இதற்கு மத்தியில் கட் ஆப் மதிப்பெண் குறித்த விபரங்களும் வெளியாகி உள்ளது. இந்த வருடம் தேர்வு சற்று கடினமாக இருந்ததால் கட் ஆப் மதிப்பெண் குறையும் என்று கூறுகின்றனர். ஆனால் காலி பணியிடங்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பில்லை என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.