Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 தேர்வு என்றால் என்ன?….. “குரூப் 4 தேர்வு எந்தெந்த பதவிகளுக்கு நடத்தப்படுகிறது”….  முழு விவரம் இதோ…..!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு என்றால் என்ன ?இது எந்தெந்த பதவிகளுக்காக நடத்தப்படுகிறது என்பது தொடர்பான முழு விவரங்களை இந்த தொகுப்பில் நாம் காணலாம்.

தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருகின்றது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 28ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆண்கள் 9 லட்சத்து 26 ஆயிரத்து 553 பேரும், பெண்கள் 12 லட்சத்து 58 ஆயிரத்து 616 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 129 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

குரூப் 4 தேர்வு என்றால் என்ன? இது எந்த பதவிகளுக்கான நடத்தப்படுகிறது? என்பதை பற்றி உங்களுக்கு தெரியாது என்றால், இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

டிஎன்பிஎஸ்சி என்பது தமிழக அரசு பணிக்கு தேவையான நபர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. அரசு பணியாளர் தேர்வாணையம் இந்திய அரசால் 1929ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்தின் பொது சேவையில் பணியாளர்களை சேர்ப்பதற்கான பொறுப்பு அந்த மாநில அரசுக்கு உள்ளது. டிஎன்பிஎஸ்சி-யில் 4 தொடர்ச்சியான தேர்வுகள் உள்ளது. அவை குழு 1, குழு 2, குழு 3, குழு 4,  இதை தவிர 5, 6, 7, 8, 9 தேர்வுகளும் நடத்தப் படுகிறது. இதில் பல நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத பணிகள் என பிரிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு எந்தெந்த பதவிகளுக்கு நடத்தப்படுகிறது :

  • ஜூனியர் உதவியாளர் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத).
  • பில் கலெக்டர்.
  • தட்டச்சு செய்பவர்.
  • ஸ்டெனோ-டைப்பிஸ்ட் (கிரேடு -3).
  • கள ஆய்வாளர்
  • வரைவாளர்

குரூப்-4 தேர்வில் கொடுக்கப்பட்டுள்ள 6 அரசுத்துறை பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 29- பிஎஸ்சி தேர்வு நடைபெறுகிறது .ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு தேர்வு நடைபெறும். இந்தியாவில் இரண்டு வகையான பிஎஸ்சி தேர்வு நடத்தப்படுகிறது.  ஒன்று யுபிஎஸ்சி அதாவது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேசிய அளவில் நடத்தப்படும் மத்திய அரசு தேர்வு. மற்றொன்று பிஎஸ்சி அதாவது பொது சேவை ஆணையம் தேர்வு ஆகும்.

Categories

Tech |