தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நாளை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் கிராமநிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் போன்ற பணி இடங்களுக்காக நடத்தப்படும் குரூப்-4 தேர்வானது சென்ற 2 ஆண்டுகளாக பரவிய கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இதையடுத்து இந்த வருடம் தேர்வு நடந்த முடிவு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் அதற்குரிய அறிவிப்பு வெளியாகியது.
அதன்பின் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அவற்றில் 7,382 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த தேர்வானது நாளை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, வேளச்சேரியில் உள்ள Alv Memorial Public School, Selaiyurயில் எழுதும் (0117001001-0117003300 பதிவெண்கள் கொண்ட ) தேர்வர்கள் மட்டும் Dr.MGR Janaki College of Arts & Science for Women, 11 & 13, Durgabai Deshmuk Road, Chennai-28 எனும் தேர்வுக் கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். திருத்தப்பட்ட ஹால் டிக்கெட் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.