தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத்து தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ பழைய தளத்தில் இருந்து இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழக முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த ஜூலை 24-ஆம் தேதி நடைபெற்றது.
இத்தேர்வானது மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். கட் ஆப் மதிப்பெண்கள் குறித்து சில தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அதாவது பொது பிரிவினருக்கு 165 – 175 வரையிலும் மற்ற பிரிவினர்கள் 145-155 வரையிலும் கட் ஆப் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் இந்த எழுத்து தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த உத்தேச விடைகளில் ஏதேனும் தவறு உள்ளது என்று கருதினால் விண்ணப்பதாரர் மேல் முறையீடு செய்யலாம். வருகின்ற ஆகஸ்ட் எட்டாம் தேதி மாலை 5.45 மணிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ‘answer key challenge’என்பதை பயன்படுத்தி முறையீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
விடைக்குறிப்பு பதிவிறக்கம்:
- முதலில் TNPSC யின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் TNPSC குரூப் 4 ஆன்சர் கீ 2022 இணைப்பில் ‘What’s New’ என்பதை கிளிக் செய்யவும்.
- TNPSC குரூப் 4 ஆன்சர் கீ 2022 pdf வடிவில் இருக்கும். அதனை கிளிக் செய்து பதில் விசையை முழுமையாக சரிபார்க்கவும்.
- பிறகு முழு விடை குறிப்பையும் டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம்.