Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 VAO தேர்வர்களே…. கல்வித்தகுதி, வயது வரம்பு எவ்வளவு?…. இதோ முழு விபரம்….!!!!!

தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி வாயிலாக அரசு துறைகளில் 4ம் நிலை பதவிகளை நிரப்ப நடத்தப்படும் தேர்வு குரூப் 4 தேர்வு ஆகும். எனினும் குரூப் 4 தேர்வுக்கு தான் அதிகமான போட்டிகள் நிலவி வருகிறது. ஏனெனில் இத்தேர்வுக்கு ஒரே ஒரு எழுத்துத் தேர்வு மட்டுமே நடைபெறும். இதில் சில வருடங்களுக்கு முன்பு VAO பதவிகளுக்கான தேர்வும் சேர்த்தே நடத்தப்படுகிறது. இந்த குரூப் 4 தேர்வு இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman) போன்ற 7 பதவிகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த குரூப் 4 தேர்வுக்கு கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் போன்ற பதவிகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. அதனை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு பொறுத்தவரையிலும் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி அடைவர்.

ஆனால் போட்டித் தேர்வுகளை பொறுத்தவரையிலும் தேர்ச்சி மதிப்பெண் என்பது ஒரு அளவுகோல் ஆகும். அதுமட்டுமல்லாமல் இத்தேர்வுக்கு எழுத்து தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். அதில் ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண்கள் என்று மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது

Categories

Tech |