Categories
மாநில செய்திகள்

TNPSC கூட்டுறவுத் துறையில் உள்ள வேலைவாய்ப்பு…. எப்படி விண்ணப்பிப்பது?…. இதோ முழு விபரம்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக எந்த ஒரு அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பும் வெளியாகவில்லை. கொரோனா தாக்கம் தற்போது சற்று குறைந்து வருவதால் படிப்படியாக அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதன்படி அரசு பணியாளர் தேர்வாணையமானது கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாகவுள்ள 8 உதவி இயக்குனர் பணி இடங்களுக்கான புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் இருப்பவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு  டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள பணியின் பெயர் உதவி இயக்குனர் கூட்டுறவு தணிக்கை (Assistant Director of Co-operative Audit) ஆகும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் 01/07/2022 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த பணியிடத்திற்கு எம்.ஏ(கூட்டுறவு) அல்லது எம்,காம்., எம்.காம் (கூட்டுறவு) மற்றும் கூட்டுறவு பிரிவில் டிப்ளோமா அல்லது ஐசிஏஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இதையடுத்து பணியில் நியமிக்கப்படுவர்களுக்கு மாத சம்பளம் ரூபாய் 56,100 முதல் 1,77,500 லட்ச ரூபாய் வரை வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வகை பணிக்கு http://www.tnpsc.gov.in/ எனும் இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். முன்பே நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 150 செலுத்த வேண்டும். இதனிடையில் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM உள்ளிட்ட வகுப்பினருக்கு மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. இந்த பணிக்கான தேர்வு ஏப்ரல் 30ஆம் தேதி காலை முதல்தாள் மற்றும் மதியம் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும். இந்த பணியை விண்ணப்பிக்க கடைசி தேதி 21/02/2022 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணி குறித்த கூடுதல் விபரங்கள் அறிய அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.

Categories

Tech |