தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு நான்கு உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி அதிகாரி ஐஏஎஸ் அதிகாரி முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், முனைவர் அருள்மதி, ராஜ் மரியசூசை ஆகிய 4 பேர் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பதவியேற்ற நாளில் இருந்து ஆறு ஆண்டுகள் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக 4 பேரும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.