Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களுக்கு அக்டோபர் 27-ல்…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசுத்துறை பணியாளர்களுக்கான தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி வழக்கமாக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணையின்படி, மீதமிருக்கும் தேர்வுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவற்றுடன் குரூப் 2, குரூப் 4 ஆகிய தேர்வுகளை நடத்துவது குறித்து அறிவிப்பு அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் வருகின்ற 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் குரூப் 2, குரூப்-1, குரூப்-4 ஆகிய தேர்வுகளை எந்த தேதிகளில் நடத்தலாம் என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு விரைவில் தேர்வுகளை நடத்தும் தேதி குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும் என்று தெரிகிறது.

Categories

Tech |