தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அவ்வகையில் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி பிப்ரவரி மாதத்தில் குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பும், மார்ச் மாதம் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.
இப்போது பல லட்சக்கணக்கானவர்கள் இந்த தேர்வுக்கு தயாராகி வருவதால் ஏழை மாணவர்களும் பயனடையும் வகையில் அரசு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றது.ஆனால் தற்போது நிலவிவரும் கொரோனா காரணமாக இந்த பயிற்சி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழக அரசு virtual learning portal என்ற இணையத்தள பக்கத்தை ஆரம்பித்துள்ளது.
இதில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் புத்தகங்கள் போன்றவை பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைந்து பயன் அடைய விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிமையான வழிமுறைகளை பின்பற்றலாம்.
- முதலில் https://tamilnaducareerservices.tn.gov.in/Registration/vle_candidate_register என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
- இப்போது காணப்படும் புதிய பக்கத்தில் register என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
- தொடர்ந்து அதில் கேட்கப்பட்டுள்ள பெயர், கல்வித்தகுதி, ஆதார் எண், ஊர், தொலைபேசி எண் போன்ற விவரங்களை உள்ளிட்டு ஐடியை உருவாக்க வேண்டும்.
- இதன் மூலம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு பதிவு அலுவலகத்தை தொடர்பு கொண்டு, இலவச ஆன்லைன் பயிற்சிக்கான வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் குழுவில் சேருவதற்கு கோர வேண்டும்.
- இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புக்கான இணைப்புகள் இந்த வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் குழு மூலம் அனுப்பப்பட்டு, ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் 12 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.