Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்நிலையில் போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்காக கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை அமைப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி UPSC-civil services, TNPSC தேர்வுகள், SSSC தேர்வுகள், வங்கித் தேர்வுகள், RRB தேர்வுகள் உட்பட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை ஏற்படுத்தி போட்டித் தேர்வுகளுக்கான பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |