Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…. தவறாம படிங்க….!!!!

தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டில் தேர்வுகளில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி நடப்பாண்டு முதல் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. TNPSC தேர்வு விடைத்தாள்கள் எடுத்துச் செல்லப்படும் வாகனம் GPS மூலம் கண்காணிக்கப்படும். தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க OMR சீட்டில் உள்ள தேர்தலின் விவரங்கள் தனியாக பிரிக்கப்படும்.

தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும் விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை வந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறினால் அவ்வாறான விடைத்தாள்கள் தேர்வாணையத்தால் செல்லாததாக்கப்படும். முற்பகலில் நடைபெறும் தேர்விற்கு 9.15 மணிக்குப் பின்னர் தேர்வு கூடத்திற்குள் நுழையவோ 1.15 மணிக்கு முன்னர் தேர்வுக் கூடத்தில் இருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

எந்த ஒரு தேர்வரும் பிற்பகலில் நடைபெறும் தேர்விற்கு 2.15 மணிக்கு பின்னர் தேர்வு கூடத்திற்குள் நுழையக் கூடாது. விண்ணப்பதாரர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு கூடம் அமைந்துள்ள இடத்தை எளிதில் தெரிந்து கொள்ளும்படி தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, விரைவு தகவல் குறியீடு அச்சிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் உடமைகளை தேர்வு மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் ஒப்படைக்க வேண்டும் போன்ற அறிவுரைகளை டிஎன்பிஎஸ்சி வழங்கியுள்ளது.

Categories

Tech |