Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களே…. பிப்ரவரி 28 தான் கடைசி தேதி…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது அரசுப் பணிக்கு தகுதியானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். அதாவது குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 3, குரூப் 4 என்று பல்வேறு வகைகளில் போட்டி தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் கொரோனா காலத்தில் அரசு சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளிவராமல் இருந்தது. எனினும் தற்போது தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

இந்நிலையில் வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. இம்மாதம் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு மற்றும் மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான புதிய பாடத்திட்டமும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்பின் போட்டி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டு உள்ளார்.

அதாவது, டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒரு முறை நிரந்தரப் பதிவு (One Time Registration) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வாளர்களும் தங்களது ஆதார் தொடர்பான விவரங்களை 28/02/2022 ஆம் தேதிக்குள் தவறாமல் இணைக்க வேண்டும். இதன் வாயிலாக டிஎன்பிஎஸ்சி-யால் வெளியிடப்படும் அறிவிக்கைகளின் அடிப்படையில் தனது ஒருமுறை நிரந்தரப் பதிவு (OTR) கணக்கு மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் விவரம் அறிய 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசி அல்லது helpdesk@tnpscexams.in /grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |