வேதியியலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு மார்ச்-19 ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 21/2021. நாள் 24.12.2021-ன் வாயிலாக அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு தொழில் சார்நிலைப் பணிகளில் அடங்கிய வேதியியலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு (கொள்குறிவகை) 19.03.2022 அன்று சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் சீட்டுகள் (Hall Ticket தேர்வாணையத்தின் இணைய தேர்வுக்கூட தளமான நுழைவு www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.