Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க…!!

நாடு முழுதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அரசு தேர்வுகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்த வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் மற்றும் வேளாண்மை அலுவலர் உதவி ஆகிய பதவிக்கு காலி பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அதில் 1,540 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு மற்றும் அந்த பதவிக்கான விதி முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் 384 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க பணிகளுக்காக வேளாண்மை அலுவலர் பதவிக்கு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அதில் 12,222 பேர் கலந்து கொண்டனர். இந்த தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு நேர்காணல் மற்றும் அந்தப் பதவிக்கான விதிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் 721 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கான நேர்காணல் வருகிற டிசம்பர் 27 முதல் 30ம் தேதி வரை மற்றும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று அதில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |