டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ அறிவிப்பு வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் வெளியிட உள்ளார். ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தலைவர் குரூப்-2 தேர்வில் மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த குரூப்-2, குரூப் 2ஏ தேர்வு காலிப்பணியிடங்கள் முதன்மை தேர்வு, முதல்நிலை தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளில் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரபூர்வ வலைதளங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் “ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன்” எனப்படும் ஒருமுறை பதிவு கட்டாயம் ஆகும். எனவே தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் OTR பதிவு செய்வது அவசியம் ஆகும்.
* டிஎன்பிஎஸ்சி login id மற்றும் Password-ஐ உருவாக்க வேண்டும்.
* ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன்( OTR) படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
* ஆன்லைன் முறையில் ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேசனுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
* பிறகு ஸ்கேன் செய்யப்பட்ட போட்டோ மற்றும் கையெழுத்து பிரதியை பதிவேற்ற வேண்டும்.
* அதனை தொடர்ந்து submit பட்டனை அழுத்த வேண்டும்.
* இந்த பதிவு முடிவடைந்தவுடன் தேர்வர்களுடைய மொபைல் எண்ணிற்கு யூசர் ஐடி & பாஸ்வேர்டு வரும். அதை கொண்டு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்ட ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.