தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2a முதல் நிலை தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.
இந்த தேர்வு முடிவுகளின் படி முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை நவம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை இ சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக இ சேவை மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.