அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பணியாளர்களை தேர்வு மூலமாக தேர்வு செய்து காலியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக தேர்வு நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்துள்ளதால் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் டிஎன்பிசி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 26ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு ஜூலை 2-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜூலை 2ம் தேதி காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.