Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு முடிவு….. தேர்வர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு வெளியானது….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம் நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். வழக்கத்தை விட இந்த வருடம் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி யால் கடந்த ஜூலை மாதம் இரண்டாம் தேதி நடத்தப்பட்ட பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த போலியான பட்டியல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த முடிவுகள் அனைத்தும் www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என தெரிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி பொய்யான தகவல் பரப்புவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |