டிஎன்பிஎஸ்சி வருடந்தோறும் அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி சென்ற வருடமும் தேர்வு நடத்தப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் TNPSC 2020 ஆம் ஆண்டிற்கான துறைத்தேர்வில் நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று மற்றும் நாளை நாகர்கோவிலிலும், ஜூலை 9-ஆம் தேதி மதுரையிலும், ஜூலை 12,13 ஆம் தேதிகளில் கோயம்புத்தூரிலும், ஜூலை 15 கிருஷ்ணகிரியிலும், ஜூலை 16,17 இல் வேலூர், திருவள்ளூரிலும், ஜூலை 26, 27 தேதிகளில் சென்னையிலும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.