பல்கலைகளில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை டிஎன்பிஎஸ்சி-யிடம் ஒப்படைக்க தமிழக உயர்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைகளில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தை அந்தந்த பல்கலைகளே மேற்கொள்கின்றன. இதில் இட ஒதுக்கீடு மற்றும் கல்வித்தகுதி முறைகள் பின்பற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இந்த நிலையில் அனைத்து பல்கலைகளிலும் பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க பரிசீலனை நடைபெறுகிறது.
இது குறித்து உயர்கல்வி துறை துணை செயலர் இளங்கோ ஹென்றிதாஸ் சார்பாக, பல்கலைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், அனைத்து பல்கலைகளும் தங்களின் ஆசிரியர் அல்லாத பணியாளர் விபரங்களை உயர்கல்வித் துறைக்கு சீக்கிரம் அனுப்ப வேண்டுமென கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.