ஒவ்வொரு ஆண்டும் TNPSC மூலம் குறைந்தது 1.5 லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர், 2023ம் ஆண்டு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணை வெளியாகியுள்ளது. அதில், ஒராண்டில் 1754 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்பட உள்ளன என்பது ஏமாற்றமளிக்கிறது.
அரசு வேலைவாய்ப்பு கோரி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கையானது நவம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி 67.61 லட்சம் என்று தமிழக அரசே தெரிவித்திருந்தது. அவர்களில் ஒரு விழுக்காட்டினருக்கு அரசு வேலை வழங்குவதாக இருந்தாலும் கூட 68,000 பேருக்கு அரசு பணிகள் வழங்க வேண்டும் இது பட்டதாரி இளைஞர்களின் அரசுப் பணி கனவை கலைக்கும் செயலாகும் என்று விமர்சித்துள்ளார்.