கொரனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 10 வன பயிற்சியாளர் பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அதன்படி, முதல் தாள் தேர்வு டிசம்பர் 4-ந் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை நடைபெறும். 2 மற்றும் 3-ம் தாள் தேர்வுகள் டிசம்பர் 5 முதல் 10 வரை காலை, மதிய வேலைகளில் நடைபெறும். இதற்காக சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.