Categories
மாநில செய்திகள்

TNPSC (2022) தேர்வு தேதி… சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டித்தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு பொது சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வர்கள் http://tnpsc.gov.in என்ற இணையதளத்திலிருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தேர்வு வரும் போது தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

Categories

Tech |