கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை இந்த ஆண்டு நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் மே மாதம் 5,000-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கான தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. அதேசமயம் மார்ச் மாதம் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 28-ஆம் தேதி அன்று நகரம் மற்றும் கிராமப்புற திட்டமிடல் உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வுகள் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி (TNPSC) அறிவித்துள்ளது.
இந்த பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் ஆன்லைன் விண்ணப்பங்களை மார்ச் 26 வரை tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செலுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி தாள்-1 மே 28-ஆம் தேதி அன்று காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரையும், தாள்-2 பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடத்தப்பட உள்ளது. இந்த உதவி இயக்குனர் பணிக்கான வயது வரம்பு, தகுதி, கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் பற்றி பார்ப்போம்.
பதவி:-
உதவி இயக்குனர்
காலியிடங்கள்:-
29
வயது வரம்பு:-
ஜூலை 1, 2022 அன்று 32 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். ஆனால் SC, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s, BCMs மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
கல்வித்தகுதி:-
நகர்ப்புறம், நகரம், வீட்டுவசதி, உள்கட்டமைப்பு, கிராமப்புறம், சுற்றுச்சூழல் திட்டமிடல், பிராந்தியம் அல்லது போக்குவரத்து ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். இல்லையென்றால் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்கிடெக்ட்ஸின் அசோசியேட்டாக இருக்க வேண்டும். டிப்ளமோ அல்லது B.Arch பட்டம் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். சமமான கல்வியை தேசிய கட்டிடக்கலை டிப்ளமோவுக்கு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்:-
நெட் பேங்கிங் / கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு மூலம் எழுத்துத் தேர்வுக் கட்டணமாக 200 ரூபாயை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்ப முறை:-
அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி நுழையவும் – tnpsc.gov.in
முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள Apply Online என்ற ஆப்ஷனை தேர்வு செய்து உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க ‘New User’ என்பதை கிளிக் செய்யவும். பிறகு விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். அதனை தொடர்ந்து ஆவணங்களைப் பதிவேற்றவும். இதையடுத்து கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும். விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்து, பின்னர் எதிர்கால தேவைகளுக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
தேர்வு செயல்முறை:-
வாய்மொழித் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு என இரண்டு நிலைகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
குறிப்பு:-
கூடுதல் விவரங்களுக்கு, https://tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தை விண்ணப்பதாரர்கள் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.