tnpsc தேர்வுக்கான அறிவிப்பாணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது .
வேலையில்லாத் திண்டாட்டம் ஆனது தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் சூழலில் படித்த பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்வதை தங்களது இலட்சியமாக கொண்டு பயிற்சி வகுப்புகளுக்கு சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு துறைகளில் புதிய பணியிடங்களை நிரப்பாமல் தமிழக அரசு இழுத்தடித்து வந்தது .
மேலும் சமீபத்தில் வெளியான ரயில்வே தேர்வுகளுக்கான முடிவில் பெரும்பாலும் வட மாநிலத்து இளைஞர்களே தேர்வானது தமிழக இளைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதனை சரி செய்யும் விதமாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,
வருகின்ற செப்டம்பர் ஒன்றாம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வானது நடைபெற இருக்கிறது .இத்தேர்வில் 6491 காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில் விஏஓ மற்றும் இளநிலை ஊழியர்களுக்கான பணிகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இடைநிலை தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.