Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

TNPSC தேர்வுகள் : பல்வேறு முக்கிய அறிவிப்பு – தமிழக அரசு அதிரடி …!!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி மூலமாக கண்காணிக்கப்படும் என்று பணியாளர் சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

இன்று சட்டமன்றத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை தொடர்பான விவாதத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) முறைகேடு தொடர்பான நடவடிக்கைகளை தடுப்பதற்கும் , வெளிப்படைத் தன்மையை மேலும் அதிகரிப்பதற்காக தமிழக அரசு எடுத்துள்ள முடிவுகளை தெரிவித்தார்.

அதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வு பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இனிமேல் தேர்வர்கள் ஒரு விரல் ரேகை பதிவு , தேர்வு நடைபெறும் இடத்தில் ஜிபிஎஸ் , சிசிடிவி கேமரா கண்காணிப்பு , ஜாமர் கருவி பொருத்தப்படும்  என்ற முக்கியமான அறிவிப்பை அறிவித்துள்ளார். இதனால் முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது.

Categories

Tech |