தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டுக்கும் அரசு பணியிடங்களுக்கான அறிவிப்பானது வெளியிடப்படும். அதேபோல குரூப் 1, குரூப் 2, குரூப்-3 மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுக்கான அட்டவணையானது வெளியிடப்படும். எந்தெந்த துறையில் எவ்வளவு காலியிடப் பணியிடங்கள் உள்ளது ? அதற்கான அறிவிப்பு வெளியாகி, அந்த காலிப் பணி இடங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பானது வெளியிடப்படும்.
கடந்த வாரம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி) சார்பில் அறிவிப்பானது வெளியிடப்பட்டது. அதில் குரூப் 1 தேர்வு தேதி மற்றும் குரூப் 2 ஆகிய தேர்வுகள் நடைபெறுவது குறித்தும், அதனுடைய காலிபணியிடங்கள், தேர்வுகள் நடைபெறும் நாட்கள் குறித்து அறிவிப்பானது வெளியிடப்படாமல் இருந்தது.
தற்போது குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பில், குரூப் – 1 தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது. 2024 மார்ச்சில் முதல் நிலை தேர்வும், 2024 நவம்பர் மாதத்தில் முதன்மை தேர்வு நடைபெறும் என தற்போது தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது.