TNPSC Group 2, 2A தேர்வு எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, குரூப்-2, குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 உள்ளிட்ட தகுதி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்நிலையில் அதன்படி பிப்ரவரி மாதத்தில், குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பானது வெளியாகியது. மேலும் இத்தேர்வுகள் 5,529 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற இருக்கிறது.
அவ்வாறு வருகிற மே 21ஆம் தேதி குரூப் 2 தேர்வும் மற்றும் அடுத்த மாதம் ( ஜூன்) 24 ஆம் தேதி குரூப்-2 தகுதித் தேர்வும் நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது குரூப் 2 தேர்வில் மைனஸ் மதிப்பெண் உண்டு என்ற அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் இத்தேர்வில் எதற்கெல்லாம் மைனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தேர்வாளர்கள் தங்களின் விபரங்கள் அடங்கிய விடைத்தாளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், விடைத்தாளை பெற்று கொண்ட பின், அதிலுள்ள தங்களின் விபரங்களை சரிபார்த்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
இதையடுத்து அவ்வாறு கொடுக்கப்பட்ட விபரங்கள், தவறாக இருப்பின் பயன்படுத்துவதற்கு முன்னரே மாற்றிக் கொள்ள வேண்டும். இந்நிலையில் அப்படி தேர்வாளர்கள் தங்களின் விடைத்தாளிற்கு பதிலாக, வேறு ஒருவரின் விடைத்தாளில் பதிவு எண்ணை எழுதிவிட்டால், அவர்களின் மொத்த மதிப்பெண்ணில் இருந்து 2 மதிப்பெண் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விடை குறிப்பை சரியாக ஷேடிங் செய்யாவிட்டால், மீண்டும் 2 மதிப்பெண்கள் குறைக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.