தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த மே மாதம் குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடத்தப்பட்டது. சுமார் 5313 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை சுமார் 9.94 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வின் ரிசல்ட் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு என நடத்தப்படும் நிலையில், முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு பதவிக்கு 10 பேர் என்ற முறையில் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அதன் பிறகு முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியான நிலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்து மெயின் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த எழுத்து தேர்வு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 25-ம் தேதி நடைபெறும். இந்த தேர்வில் கலந்து கொள்பவர்கள் ஆன்லைனில் ரூபாய் 200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
இதனையடுத்து தேர்வு கட்டணம் மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களை முறையாக நவம்பர் 17-ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தேர்வு கட்டணத்தை செலுத்துவதற்கான ஆன்லைன் போர்டல் டிசம்பர் 15-ஆம் தேதியோடு மூடப்படும். எனவே குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தேர்வர்கள் தேர்வு கட்டணத்தை செலுத்தி சான்றிதழ்களை சமர்ப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.