தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அடுத்து அடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வு அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பிரிவுக்கான காலியாக உள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 2011-ம் ஆண்டு நிலவரப்படி தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து டிஎன்பிசி குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
இதையடுத்து இந்த தேர்வின் மூலம் துணை வணிகவரி அதிகாரி, சார்பதிவாளர் முதல் தனிப்பட்ட கிளார்க் மற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட் ஆகிய பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் குரூப் 2 பணி யிடங்களில் ரூ.9300 முதல் ரூ.34800 வரை சம்பளம் வழங்கப்படும். குரூப் 2-A பணியிடங்களுக்கு ரூ.5200 முதல் ரூ.20200 வரை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.