Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப்-2 தேர்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக அரசு பணிகளுக்கான நியமனம் எதுவும் செய்யப்படவில்லை. இந்நிலையில் தமிழக அரசு ஒவ்வொரு நிலைக்கான தேர்வுகள் மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. பட்டதாரிகளுக்கு குரூப்-2 தேர்வு வரும் பிப்ரவரி மாதம் நடத்தப்பட இருப்பதாகவும், அவற்றுக்கான முக்கிய விவரங்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி குரூப்-2 தேர்வு நிலையில் 5,831 காலிப்பணியிடங்கள் இருக்கிறது.

இதில் குரூப்-2 தேர்வு நிலையில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். மேலும் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் போன்ற பதவிகள் நியமனம் செய்யப்படுகிறது. மேலும் அரசு துறை உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் போன்ற நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கும் நியமனம் செய்யப்படுகிறது.

இந்த நிலையிலான பதவிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலையில் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். பொது பிரிவினருக்கு 20 முதல் 30 வயது வரையும், மற்ற வகுப்பினருக்கு 40 வயது வரையும் சலுகை உண்டு. முதல்நிலைத் தேர்வு 3 மணி நேரம் 200 வினாக்களுக்கு நடத்தப்படும். முதன்மை தேர்வு மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணிநேரம் நடத்தப்படும். குரூப் 2 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு பின் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் கலந்தாய்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள். இதனிடையில் நேர்முகத்தேர்வு அல்லாத முதன்மை தேர்வுக்கு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்.

Categories

Tech |