தமிழக முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு மையம் குறித்து ஏற்பட்ட குழப்பம் தொடர்பாக திருத்தப்பட்ட தேர்வு மையம் விபரத்தை ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 242 தேர்வு மையங்களில் சுமார் 66,800 தேர்வர்கள் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு செல்லவும் கடைசி நேரம் அலைச்சல்களை தவிர்க்குமாறும் தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக படித்து கடைபிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் “பென்னாகரம் வட்டம், Hall No.014, அரசு உயர்நிலைப் பள்ளி, சத்தியநாதபுரம் அஞ்சல், மைல்கல், கோட்டையூர், பென்னாகரம் (Tk), தருமபுரி ( Dt)” என உள்ளது. இத்தேர்வு மையத்தில் தேர்வு எழுதும் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட தேர்வர்கள் Hall No.014-ல் “அரசு உயர்நிலைப் பள்ளி, சத்தியநாதபுரம் அஞ்சல், மைல்கல், கொட்டாவூர், பென்னாகரம் (Tk), தருமபுரி (Dt)” என்ற தேர்வு மையத்திற்குச் சென்று தேர்வு எழுத அறிவுறுத்தப்படுகிறது. இத்தேர்வு மையம் பென்னாகரத்திலிருந்து மேச்சேரி செல்லும் வழியில் சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.