தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு மொத்தம் 7138 பணிகளுக்காக நடத்தப்பட்டது. இந்த தேர்வை 18.50 லட்சம் பேர் எழுதிய நிலையில் முதன்முதலாக ஆங்கிலம் தவிர்த்து தமிழ், கணிதம் மற்றும் பொது அறிவு பாடத்திட்டங்களை மட்டுமே கொண்டு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு வழக்கம்போல் இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்ததாக தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுமே கூறியிருந்தனர்.
இந்நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு தற்போது டிஎன்பிஎஸ்சி மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் கட் ஆப் மார்க் வழக்கம்போல் அல்லாமல் குறைவாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.