Categories
கல்வி

TNPSC GROUP-VI: வனத்தொழில் பழகுநருக்கான தேர்வுகள்…. தேர்வு மையங்களில் திடீர் மாற்றம்….. வெளியான புதிய அறிவிப்பு…..!!!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தமிழக வனத்துறையைச் சேர்ந்த வனத்தொழில் பழகுநர் பணிக்கான தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வெளியான நிலையில், டிசம்பர் 4-ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு தமிழகத்தில் உள்ள 15 இடங்களில் நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தேர்வு நடைபெறும் மையங்களின் எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய அறிவிப்பின்படி 7 மையங்களில் மட்டுமே வனத்தொழில் பழகுநர் பணிக்கான தேர்வுகள் நடைபெறும். அதன்படி வேலூர், திருநெல்வேலி, திருச்சி, சேலம், மதுரை, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள மையங்களில் தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் கட்டாய தமிழ் மொழி தேர்வு‌ டிசம்பர் 4-ம் தேதி நேரடியாக எழுத்து முறையில் நடைபெறும். அதன் பிறகு பிற பாடங்கள் கணினி வழி தேர்வாக டிசம்பர் 5-ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும்.

Categories

Tech |