கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்விற்கான தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நடத்தப்பட இருந்த தேர்வுகள் மற்றும் நேர்காணல் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சமீபத்தில் கால்நடை உதவி மருத்துவர் பதவி காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு 1907 பேர் தற்காலிகமாக நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஜனவரி 4, 8, 11, 12, 18, 23, 25, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.