டிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் ஐஏஎஸ் தற்போது நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி காலம் என்பது தலைவராக இருப்பவர் 62 வயது நிறைவு செய்திருக்க வேண்டும் அல்லது ஆறு ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கலாம். அதன் அடிப்படையில் கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அருள்மொழி ஐஏஎஸ் டிஎன்பிஎஸ்சி தலைவராக பதவியேற்றார். அவரின் பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது பாலச்சந்திரன் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பாலச்சந்திரன் வணிகவரி, பதிவுத் துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்தார்.
டிஎன்பிஎஸ்சி தலைவர் என்ற பொறுப்பு என்பது மிகவும் முக்கியமான ஒரு பொறுப்பு. தமிழகத்தின் முக்கியமான அரசு பணிகள் எல்லாம் இதன் மூலமாகவே தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுகின்றனர். குறிப்பாக இந்த காலகட்டம் என்பது பாலச்சந்திரனுக்கு மிகவும் சவாலான காலகட்டமாக பார்க்கப்படுகின்றது.ஏனெனில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் குரூப்-1, குரூப்-2, VAO தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தன. சம்மந்தப்பட்ட பலரும் கைது செய்யப்பட்ட நிலையில் டிஎன்பிஎஸ்சியின் நம்பகத்தன்மையை மக்களிடம் கொண்டு வரவேண்டிய ஒரு மிகப்பெரிய சவால் இருக்கிறது.