Categories
கல்வி

TNPSC: சர்வேயர் பணிக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….‌ பதிவிறக்கம் செய்வது எப்படி….? இதோ முழு தகவல்….!!!!!

தமிழகத்தில் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வாணையம் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது சர்வேயர் பணிக்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது. சர்வேயர் பணியில் நில அளவையர், வரைவாளர் பணிகளும், தமிழக நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அளவர் மற்றும் உதவி வரைவாளர் பணிகளும் அடங்கும். இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வு நவம்பர் 6-ம் தேதி காலை மற்றும் மதியம் என இரு சுழற்சிகளில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஹால் டிக்கெட்டை தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in போன்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனையடுத்து தேர்வு மைய நுழைவுச்சீட்டுகளை அவரவர் ஓடிஆர் டேஷ்போர்டு மூலமாக மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும். ஓடிஆர் டேஸ் போர்டில் லாகின் செய்து பிறந்த தேதி மற்றும் விண்ணப்ப எண் போன்றவற்றை உள்ளீடு செய்து தேர்வு மைய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நீங்கள் பதிவிறக்கம் செய்ததை பிரிண்ட் எடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.

Categories

Tech |