Categories
மாநில செய்திகள்

TNPSC, SSC போட்டி தேர்வுகள்…. அக்டோபர் 20 முதல் இலவச பயிற்சி…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல்வேறு அரசு பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் கலந்து கொண்டு ஆனால் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் வெளியேறுகின்றனர். அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க படாததால் அவர்களது உழைப்பும் முயற்சியும் வீணாகி விடுகின்றது.

மேலும் தற்போது நடந்து முடிந்த யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் முதல் நிலை இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலையில் முறையான பயிற்சி இல்லாததால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து கோவை மாவட்டத்தை சேர்ந்த காது கேளாத மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ரஞ்சித் என்பவர் இந்திய அளவில் 750 வது இடத்தைப் பெற்று யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று உள்ளார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித், மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் தேர்வில் தமிழகத்தில் சேர்ந்த மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அதனை தொடர்ந்து மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியிடங்களை நிரப்புவதற்காக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல்நோக்கு பணியாளர், பெண்கள் படை பயிற்றுவிப்பாளர் மற்றும் மருத்துவ பொறியாளர் ஆகிய பணிகளுக்கு 3,261 பணியிடங்களை நிரப்புவதற்காக எஸ்எஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்தத் தேர்வுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அதற்கான இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி முதல் எஸ்எஸ்சி தேர்வுக்கான பயிற்சிகள் தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் சென்று பார்க்கவும் அல்லது 0436-6224226 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்காக இணையதளம் உருவாக்கப்பட்டு அதில் தங்கள் விவரங்களை பதிவு செய்து அதில் பதிவேற்றம் செய்துள்ள பாட குறிப்புகள் மாதிரி வினாக்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Categories

Tech |