Categories
கல்வி

TNPSC: நில அளவையர் மற்றும் வரைவாளர் தேர்வு…. விண்ணப்பதாரர்களுக்கு கலெக்டரின் முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வாணையம் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது சர்வேயர் பணிக்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது. சர்வேயர் பணியில் நில அளவையர், வரைவாளர் பணிகளும், தமிழக நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அளவர் மற்றும் உதவி வரைவாளர் பணிகளும் அடங்கும்.

இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வு நவம்பர் 6-ம் தேதி காலை மற்றும் மதியம் என இரு சுழற்சிகளில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்வாணையத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த ஹால் டிக்கெட்டை தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in போன்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கும், பொதுத் தேர்வில் 100 மதிப்பெண் களுக்கும் கேள்விகள் கேட்கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தமிழில் 40% தேர்ச்சி கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் தேர்வினை 3760 பேர் எழுத இருக்கின்றனர். இந்த தேர்வுக்கு 12 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அதன் பிறகு தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை மையத்திற்கு எடுத்துச் செல்வதற்காக 4 இயங்குக்குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்த தேர்வு 12 மையங்களில் நடைபெற இருக்கும் நிலையில், 12 தேர்வு கூட ஆய்வு அலுவலர்களும், 13 வீடியோ கிராபர்களும் தேர்வு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்பிறகு தேர்வு மையத்தில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிப்பதோடு, செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் நாளில் தேர்வு மையங்களுக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |