Categories
மாநில செய்திகள்

TNPSC(2022) குரூப்-1, 2A தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அரசுத்துறை பணியிடம் தேர்வான குரூப் 2, 2A தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டு குரூப் 2 தேர்வின் கீழ் 5,529 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் அவை தேர்வின் மூலமாக நிரப்பப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த குரூப் 2 தேர்வு தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்டு வருகிறது. 2022ஆம் ஆண்டு குரூப்-2 தேர்வு மே 21ஆம் தேதி நடைபெறும். இதற்கான விண்ணப்பம் பதிவு கடந்த 23ஆம் தேதி முதல் தொடங்கியது.

இந்த குரூப்-2 தேர்வு முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு என்று 2 கட்டமாக நடத்தப்பட்டு வரும் நிலையில், இதில் தேர்ச்சி பெறுவோர் நேர்காணல் மூலமாக பணி நியமனம் செய்யப்படுவர். ஆகவே தேர்வை எழுத விரும்புவோர் ஏதேனும் ஒரு பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும், சில பதவிகளுக்கு கூடுதல் தகுதியாக தட்டச்சு தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட சில பதவிகளுக்கு அந்தத் துறை சார்ந்த பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பொதுப்பிரிவில் 18-32 வயது வரை இருப்பவர்கள் தேர்வை எழுதலாம். இதனிடையில் பிற பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

 குரூப் 2, 2A பாடத்திட்டம்

# முதல் நிலைத் தேர்வானது 2 பிரிவுகளாக நடைபெறும். இதில் முதல் பிரிவில் தமிழ் (அல்லது) ஆங்கிலம் மொழிப்பாடத்தில் இருந்து 100 வினாக்களும், 2-ம் பொது அறிவு பகுதியில் 75 வினாக்களும் இடம்பெறும்.

# முதல்நிலைத் தேர்வில் பொது ஆங்கிலம், தமிழ் போன்றவற்றில் இருந்து வினாக்கள் இடம் பெறும் என்றும் இந்த பிரிவு பத்தாம் வகுப்பு தரத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

# முதல்நிலைத் தேர்வின் 2-ம் பிரிவில் பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், இந்தியாவின் புவியியல், இந்தியாவின் வரலாறும் பண்பாடும், இந்திய ஆட்சியியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.

# முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர், முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்பது கவனிக்கத்தக்கது.

Categories

Tech |