தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சீருடை பணியாளர் இரண்டாம் நிலை காவலர்,இரண்டாம் நிலை சிறைகாவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்வு களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற ஜூலை 27ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பயனடையும் வகையில் சிறப்பான கல்வியாளர்களைக் கொண்டு இந்த பயிற்சி முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 3,552 காவலர் காலி பணியிடங்கள் குறித்தான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
மேலும் காணொளி வழி கற்றல், மின்னணு பாட குறிப்புகள், புத்தகங்கள், போட்டி தேர்வுக்கான பயிற்சிகள் மற்றும் மாதிரி தேர்வுகள்,நடப்பு நிகழ்ச்சிகள் ஆகிய விவரங்கள் அனைத்தையும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி பக்குவத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். போட்டித் தேர்வு எழுத இருக்கும் விண்ணப்பதாரர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.