Categories
மாநில செய்திகள்

TNUSRB தேர்வு: பாடத்திட்டம், தேர்வு முறை பற்றி….வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் அரசு வேலை வாங்கவேண்டும் என பல பேர் கனவுடன் இருக்கின்றனர். கொரோனாக் காலத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இப்போது ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இத்தேர்வு வாயிலாக 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, உடற் தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எழுத்துத்தேர்வு 2 பகுதிகளாக நடைபெறும். இதில் முதல் பகுதி தமிழ்மொழித் தகுதி தேர்வாகும். அதில் 40 சதவீத மதிப்பெண்கள் அவசியம் எடுக்க வேண்டும். பின் அடுத்தபகுதியானது 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

தமிழ் மொழி தகுதித்தேர்வு பாடத் திட்டம்

இலக்கணம்: எழுத்து,சொல்,பொருள்,பொது,யாப்பு,அணி, மொழித் திறன், பிரித்தெழுதுதல், பிழைத்திருத்தம்,எதிர்ச்சொல், சேர்த்தெழுதுதல்,மொழிபெயர்ப்பு

இலக்கியம்: திருக்குறள், தொல்காப்பியம், கம்பராமயணம், எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், அறநூல்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியம், புதுக்கவிதை, மொழிப்பெயர்ப்பு நூல்கள் போன்றவை வரும்

பொது அறிவு: இயற்பியல், வேதியியல், உயிரியல், சூழ்நிலையியல், உணவு & ஊட்டச்சத்தியல், வரலாறு, புவியியல், இந்திய அரசியல், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் போன்ற  பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

உளவியல்: தொடர்பு (அல்லது) தொடர்புகொள் திறன், எண் பகுப்பாய்வு, தருக்க பகுப்பாய்வு, அறிவாற்றல் திறன், தகவல்களைக் கையாளும் திறன் போன்றவற்றிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.

கணிதம்: சுருக்குக, மீ.பெ.வ மற்றும் மீ.சி.ம, எண்ணியல், விகிதம், சதவீதம், சராசரி, வயது கணக்குகள், லாபம்,  நட்டம், நேரம், வேலை, சங்கிலிதொடர், குழாய் மற்றும் தண்ணீர் தொட்டி, தனிவட்டி, கூட்டுவட்டி, அளவியல், பரப்பளவு, கன அளவு, புள்ளியியல், கோணங்கள், இயற்கணிதம், தரவு கணக்கீடு போன்றவை கணிதப்பகுதியில் கேட்கப்படும்.

தேர்வுக்கு தயாராகுவது எப்படி?..

தமிழ் மற்றும் பொதுஅறிவு பகுதிகளுக்கு 6ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களை படிக்க வேண்டும். புக்பேக் கொஸ்டின் நன்றாக படிக்க வேண்டும்.

Categories

Tech |