Categories
மாநில செய்திகள்

TNUSRB 444 உதவி ஆய்வாளர் (SI) பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள்…வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 444 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக எந்த ஒரு போட்டித் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஏராளமான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தற்போது குறைந்துவரும் கொரோனா பரவலின்  காரணமாக பல வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. மேலும் அரசானது போட்டித்தேர்வுக்கான அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் நிலையில், தமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு போன்ற சீருடை சேவைகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பு இம்மாதம் 8ஆம் தேதி வெளியானது. மேலும் இத்தேர்வுக்கு ஏப்ரல் 7ஆம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து இப்பதிவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இத்தேர்வுக்கு இணையத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.மேலும் இந்த தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரூபாய் 500 வசூலிக்கப்படுகிறது. மேலும் இத்தேர்வில் முதன்முறையாக தமிழ்மொழி தகுதித்தேர்வை அரசின் வழிகாட்டுதல்படி நடத்த உள்ளது. இதையடுத்து தேர்வு வாரியத்தில் கட்டுப்பாட்டு அறையில் இத்தேர்வுக்கான உதவி மையம் ஒன்று அமைக்கப்படுகிறது.

இந்த உதவி மையங்கள் மாநிலம் முழுவதிலும் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், பணி நேரத்தில் செயல்படும். இதன்  மூலம் விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் கேட்பதற்கு உதவி மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு  044-40016200, 044-28413658 என்ற தொலைபேசி எண்களையும் மற்றும் 94990 08445 என்ற கைபேசி எண் மூலம் உதவி மையத்தை விண்ணப்பதாரர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |