Categories
அரசியல் மாநில செய்திகள்

#TNwelcomesAmitshah: இன்றைய சுற்றுப்பயணம் விவரம் …!!

கலைவாணர் அரங்கில் 4.30 மணி முதல் 6 மணி வரை அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

இன்று தமிழகம் வருகை தர உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 67 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும்,சட்டப்பேரவை தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அமித் ஷா தமிழகத்திற்கு முதல் முறையாக வருகை தர உள்ளார். இன்று (சனிக்கிழமை )காலை 10.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் அவர், பிற்பகல் 1.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு தமிழக அரசு மற்றும் பாஜக கட்சி சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்படுகிறது.

அதன்பின், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலை சாலைமார்க்கமாக 1.55 மணிக்கு அடைகிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அமித் ஷா, மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கலைவாணர் அரங்கம் வருகிறார். கலைவாணர் அரங்கில் 4.30 மணி முதல் 6 மணி வரை அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

அப்போது, 380 கோடி ரூபாய் செலவில் கட்டமைப்பக்கப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை நீர் தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார் 67 கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம், சென்னை வர்த்தக மைய விரிவாக்கம், இந்திய ஆயில் நிறுவன திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டுகிறார்.

அதைத்தொடர்ந்து மீண்டும் லீலா பேலஸுக்கு வரும் அவர், மாலை 6.20 மணி முதல் பாஜக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பின் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தில் பாஜக கட்சி வளர்ச்சி, சட்டப்பேரவை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.

இரவு சென்னையில் தங்கும் அமித் ஷா, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ள நிலையில், அமித் ஷாவின் வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |