Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கையை சேர்ந்த 14 பேர்களிடம்… பணம் பெற்ற 3 பேர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கையை சேர்ந்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு படகு மூலம் மண்டபம் பகுதிக்கு அழைத்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் பகுதியை சேர்ந்த சிலர் இலங்கை அகதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை கள்ளத்தனமாக படகில் தமிழகம் அழைத்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மதுரை கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் மண்டபம் பகுதியை சேர்ந்த ரசூல்(30), அப்துல் முகைதீன்(37), சதாம்(35) ஆகிய 3 விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த 3 பேரும் சில மாதங்களுக்கு முன்பு 14 இலங்கை அகதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு நடுக்கடலில் வைத்து பிளாஸ்டிக் படகில் ஏற்றி மண்டபம் மரைக்காயர் பட்டினத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அங்கிருந்து கர்நாடக மாநிலம் மங்களூருக்கு அழைத்து சென்று தங்குவதற்குரிய ஏற்பாடு செய்து குடுத்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் இலங்கை அகதிகளிடம் வாங்கிய 5 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து இந்த குற்றத்தில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Categories

Tech |