Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அனைத்து ஆசிரியர்களுக்கு – அதிரடி அறிவிப்பு

டெட் தேர்வுக்கான சான்றிதழ் இனி ஆயுள் வரை செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெட்  ( ஆசிரியர் தகுதி தேர்வு )  சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சாற்று 7ஆண்டு வரை மட்டுமே செல்லும் என்பது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி ஒருமுறை டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது ஆயுள் முழுதும் செல்லும் என மாற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. NCTEயின்  புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இது குறித்தான கோரிக்கைகள் ஆசிரியர்கள் சார்பாக வைக்கப்பட்டது. ஒரு முறை தேர்ச்சி பெற்ற சான்றிதழ் ஆயுள் வரை செல்லும் என்று நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர் கோரிக்கையை ஏற்று, இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |